விசேட தேவையுடையோரும் வீடுகளில் நீண்ட காலம் வாழ வழிசெய்யும் வகையில், ஆண்ட்ரியா ஹோர்வர்த் அவர்கள் தலைமை தாங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அதிகார பூர்வ எதிர்கட்சியான என்டிபி கட்சி கடந்த திங்கட்கிழமை சட்டமன்றத்தில் ஒன்றாரியோவின் சீர்குலைந்த வீட்டு பராமரிப்பு முறைமையை சரிசெய்யும் திட்டத்திற்கான வாக்கெடுப்பை மாகாணப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தவுள்ளது.
என் டி பி தலைவர் ஹோர்வத் அவர்கள் ஸ்காபரோவில் உள்ள தமிழ் ஊடகநிறுவனங்களை சந்தித்து, பதிவு முதலீடுகள், பணியாளர்களை நியமித்தல், முழு அமைப்பையும் பொதுவான – இலாப நோக்கற்றதாக மாற்றுவது அடங்கலான இந்த பிரேரணையை பற்றிவிவாதித்தார். இதன்போது அவருடன் ஸ்கார்பரோ தென்மேற்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MPP) டோலி பேகம் மற்றும்ஸ்காபரோ மத்திய தொகுதிக்கான ஒன்டாரியோ NDP வேட்பாளர் நீதன் ஷான் ஆகியோர் இணைந்திருந்தனர்.
“வீடுஎன்பது நமது அன்புக்குரியவர்கள் இருக்க மிகவும்ஆரோக்கியமான, மகிழ்ச்சியான இடம். அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் சுதந்திரமாகவும் முடிந்தவரை பாதுகாப்பாகவும் இருப்பதற்கு தகுதியானவர்கள்,” என்று ஹோர்வத் கூறியுள்ளார்.
“ஆனால்அது நடக்கவில்லை, காரணம் வீட்டு பராமரிப்பு முறைமை சீர்குலைந்துள்ளது. லிபரல்களாலும் கன்சர்வேட்டிவ்களாலும் நீண்ட காலமாக செய்யப்பட்டுவரும் செலவுக் குறைப்புகளும் தனியார்மயமாக்கலும், வீட்டு பராமரிப்பு முறையை மருத்துவர்கள் கோரினால் கூட, மக்கள் நிராகரிக்குபடியானஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் மிகுந்த வேலைப்பழுவுடன் இருப்பதால், அவசரமான அல்லது இரத்து செய்யப்பட்ட வீட்டு பராமரிப்பு வருகைகளோடு சமாளித்துப் போக வேண்டிய நிலைமக்களுக்கு ஏற்படுகிறது. சீர்குலைந்த வீட்டு பராமரிப்பு முறை முதியவர்களை கைவிட்டுள்ளதால், துரதிர்ஷ்டவசமாக நீண்ட கால பராமரிப்பு நிலையங்களிலோமருத்துவமனைகளிலோ சிலரின் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. இது நாம் விரும்பும்மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. ஆனால் நாம் அதை சரிசெய்யமுடியும்.”
முந்தையலிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் அரசாங்கங்களால் வீட்டுப் பராமரிப்பு பெரும்பாலும் தனியார்மயமாக்கப்பட்டது – இது, பராமரிப்பு மற்றும்ஒழுங்கான பணியாளர் நிலைகளில் இருந்து பணத்தை பாரிய நிறுவனங்களின் பைகளுக்கு திருப்பும் ஒரு திட்டம் என NDP கூறுகிறது. பெருந்தொற்றுக் காலம் பராமரிப்பு முறையில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியம் பெற்ற, அதிக வேலைப்பளுவுள்ள, பெரும்பாலும்மோசமாக பாதுகாக்கப்பட்ட ஊழியர்கள் வெளியேறினர் – எனவே, செவிலியர்களுக்கான வெற்றிடம் 26 வீதத்தையும் முழுநேர தனிப்பட்ட ஆதரவு பணியாளர்களுக்கான வெற்றிடம் 14 வீதத்தையும் எட்டியது.
ஒன்டாரியோவின்வீட்டு பராமரிப்பு முறையை மேலும் தனியார்மயமாக்கியதன் மூலமும் மக்களுக்கான பராமரிப்பு திட்டங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களை அனுமதித்ததன் மூலமும் பிரதமர் டக் ஃபோர்ட் அதனைமோசமாக்கினார்.
“முதியோர்களைவௌியேற்றுவதற்கு பதிலாக, நமது வாழ்க்கைத் தரத்தைப்பாதுகாப்பதும் மேம்படுத்துவதுமான ஒரு பராமரிப்பை கற்பனைசெய்து பாருங்கள். உங்கள் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் சௌகரியமாகவும் அன்பாகவும் நீண்டகாலம் வீட்டில் இருக்கக்கூடியதொரு பராமரிப்பினை கற்பனை செய்து பாருங்கள். இந்த மாற்றத்திற்கு காத்திருப்புதேவையில்லை. அதனால் தான் இன்று நான்அதை முன்மொழிகிறேன் – நிதியுதவி, பணியாளர்கள் பிரச்சினை மற்றும் தனியார்மயமாக்கப்பட்ட வீட்டு பராமரிப்பு முறையினை பொதுவான இலாப நோக்கற்ற திட்டமாகமாற்றுவதன் மூலம் அதனை சீர்செய்வோம்.”
வீட்டுபராமரிப்பு, தனிப்பட்ட ஆதரவு பணியாளர்களுக்கான வருமான உயர்வு – முழு நேர பணிகள், முழு அமைப்பையும் பொதுவான மற்றும் இலாபநோக்கற்றதாக மாற்றுதல் போன்றவற்றுக்காக 1 பில்லியன் டொலர் முதலீடு அடங்கலாக, வயதான ஒன்டாரியர்களுக்கான செயற்தளத்தை ஹோர்வத் வெளியிட்டுள்ளார். ஹோர்வத் திங்கட்கிழமை வாக்கெடுப்பொன்றை வலியுறுத்தும் பிரேரணை தற்போது அதன் பணியை ஆரம்பித்துவிட்டது. ” என்று என் டி பி தலைவர் ஹோர்வத் அவர்கள் தெரிவித்துள்ளார்