UK ரட்னம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையுடன் திறன் பலகை வகுப்பறைத் திறப்புவிழா 26/02/2022 அன்று இலங்கையின் சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட கே/தெஹி பூனுகல தமிழ் வித்தியாலயத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இப்பாடசாலயானது மிகவும் பின்தங்கிய தோட்டப் புறங்களில் வறுமை கோட்டின் கீழ் காணப்படும் மாணவர்கள் கல்வி பயிலும் ஒரு பாடசாலையாக காணப்படுகிறது.
அதிபர் திரு. K ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொண்டு நிறுவனங்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப்பாடசாலை தலைமை ஆசிரியரின் உரையில் நவீன திறன் வகுப்பறைகளை அன்பளிப்புச் செய்தவர்களுக்கு நன்றி பாராட்டி , காலத்திற்கேற்ப சிறந்த தொழிநுட்ப வசதிகளுடன் இந்த வகுப்பறை விளங்குவதாகவும் இதனூடாக எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த முடியும் என உறுதி மொழி கூறினார்.
தொடர்ந்து விஷேட அதிதி சப்ரகமுவ மாகாண கல்வி உதவி பணிப்பாளர் திருமதி மனோகரன் அவர்கள் மலையக மாணவர்கள் கல்வி துறையில் மிகவும் பின்தங்கியுள்ள தாகவும் அதனை நிவர்த்தி செய்ய இது போன்ற திறன் வகுப்புகள் அத்தியாவசியம் எனவும் , திறன் வகுப்பிற்கான பயற்சிகளை தன்னுடைய தலைமையின் கீழ் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து வன்னி ஹோப் நிறுவனத்தின் தலைவர் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்தார்.