(மன்னார் நிருபர்)
பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (06) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு ரெறொன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினால் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ரெறொன்ரோவின் மனித நேயக் குரலின் தலைவருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் மு.கனகலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.