(10-03-2022)
யாழ் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இன்று (10) கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர்.
புத்தூர் பகுதியை சேர்ந்த குக பிரகாசம் ( வயது 59) அவரது மனைவியான சுகுணா (வயது 55) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது மின்சாரம் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற வேளை கணவனும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகிய உயிரிழந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.