கனடிய வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களின் துணைவியார் மறைந்த ஷீலா சுகுமார்; அவர்களின் ஞாபகார்த்தமாக 5 மில்லியன் ரூபாய்களுக்கான காசோலை யாழ்ப்பாணம்
வைத்தியசாலைக்கு வழங்கப்பெற்ற நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் நந்தகுமார் அவர்களிடம் கையளிக்கப்பெற்ற இந்த காசோலையை அவர் பெற்றுக்கொண்ட போது அங்கு சமூகமளித்தவர்களில் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர் திரு.குலா செல்லத்துரை, டாக்டர் சிவாஜி
தம்பதியினர். சிவசிறி பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தம்பதியினர் மற்றும் இளங்கோ இரத்தினசபாபதி ஆகியோர் மற்றும் வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்கள் தாதிகள்
ஆகியோர் இங்கு காணப்படுகின்றனர்.