மன்னார் நிருபர்
சர்வதேச மகளிர் தினத்தை நினைவு கூறுமுகமாக யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் சர்வதேச மகளிர் தினம் நேற்றைய(11) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புங்குடுதீவு பனை பொருள் போதனாசிரியர் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர் தூய சவேரியார் ஆலய பங்கு தந்தை ரமேஷ் அடிகளார், புங்குடுதீவு இந்து மத குரு முரளி ரத சர்மா, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ ,மன்னார் சட்டத்தரணி புராதனி ,அருட்தந்தை கலாநிதி ஜோன் போல் சிவலிங்கம் D.X.N.NWC.CCTV பிரதிபலிப்பு சிகிச்சையாளர் ப.நிர்மலன் வேலணை கிராம சேவையாளர் பத்மசிறி கனகரெத்தினம் நோனா வின்சன் ,சமூக சேவையாளர் புங்குடுதீவு மற்றும் தீவக பெண்கள் அமைப்பினர் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் மாணவ மாணவியரின் அழகிய கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.