இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பால்கே
(13-04-2022)
வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பால்கே தெரிவித்தார்.
வடக்கு மீனவர்களிற்கு உதவி திட்டங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,,,
கடற்தொழில் அமைச்சர் இலங்கை இந்திய உறவு பாலம் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகஇருக்கிறார் நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை இந்திய உறவுக்கு மிகவும் பக்கபலமாக இருப்பதோடு இலங்கை மற்றும் இந்திய மக்களின் உறவு பாலமாக இருந்து செயற்பட்டு வருகின்றார்.
அரசியல் ரீதியான உறவு பாலம் மட்டுமல்ல இந்தியா இலங்கை மக்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் உறுதியாக செயற்படுகிறார். இம்முறை கச்சதீவி உற்சவத்தினை திறம்பட செயற்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்கு கடற்தொழில் அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தின் நடத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவத்தினை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைத்த கடற்தொழில் அமைச்சர் மற்றும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தியா ஒரு உங்களுடைய உண்மையான ஆர்வத்தோடு உங்களுடைய சகோதர நாடு உங்களுக்காக என்றும் அக்கறையுடன் செயற்படும் கொரோனா பாதிப்பு இலங்கை இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை உலக நாடுகள் அனைத்தையும் பாதித்துள்ளது பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தாக்கத்தை ஏற்படுத்தி பல்வேறு பொருளாதார ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் இருவரும் இணைந்து இந்த கோரணா பாதிப்புகளில் இருந்து மீளுவதற்கு முயற்சித்து போராடுகின்றோம். இது இரண்டு நாடுகளுக்கும் உரிய ஒரு சிறப்பம்சமாகும்.
இலங்கையும் இந்தியாவும் ஒருவருக்கு ஒருவர் உதவி இந்த கொரோனாவிலிருந்து முன்னேறுவதற்கு செயற்பட்டதன் மூலம் நமது இலங்கை இந்தியாஉறவானது அதன்மூலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாங்க முதல் கட்டமாகயாழ்ப்பாண மீனவர்களுக்கான உதவித் திட்டத்தை வழங்கியுள்ளோம் மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் துணை தூதரகம் என்ற அடிப்படையிலும் இந்திய நாடு என்ற அடிப்படையிலும் அதற்குரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்.
எதிர்காலத்தில் இந்திய அரசின் உதவித் திட்டங்கள் பன்மடங்கு அதிகரித்து பல்வேறு உதவிகளை வழங்குவோம் அத்துடன் உதவித் திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளோம்.
ஏற்கனவே பலதடவை யாழ் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினேன். அதிலிருந்து நான் ஒன்றை புரிந்து கொள்கின்றேன் அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டியது கட்டாயமானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் நடாத்தி அத்தோடு அரசு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி மீனவ பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இந்திய துணைத் தூதரகம் என்ற ரீதியில் மீனவபிரதிநிதிகளின் பிரச்சினை தொடர்பில் அதனை தீர்ப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதலீட்டாளர்களை முதலீடு வைத்து மீன்பிடி சம்பந்தமான முதலீடுகளை இங்கே முதலிட வைத்து அவ்வாறான முதலீடுகளை முதலிடுவதன் மூலம் மீனவர் சமூகங்களுக்கு அதன் மூலம் வருமானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் அது தொடர்பில் நான் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் அது தொடர்பில் நானும் எனது அணுசரணையை வழங்க உள்ளேன்.
அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடெத்துள்ளேன் அத்தோடு வெகு விரைவில் எமது அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது அத்தோடு கலாச்சார மத்திய நிலையத்தை இரண்டு நாடுகளும் இணைந்து எவ்வாறு நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இருக்கிறோம்.