தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மருத்துவ மனைகளில் அவசர சிகிச்சைகளுக்குக் குருதிக்கு
நிலவும் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு குருதிக் கொடை முகாம்களைப் பல்வேறு
இடங்களிலும் ஏற்பாடு செய்து வருகின்றது .அதன் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை [19-03-
2022] கோண்டாவிலில் குருதிக் கொடை முகாமை ஒழுங்கு படுத்தியுள்ளது.கோண்டாவில்
தில்லையம்பதி சிவகாமி அம்பாள் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற இக் குருதிக் கொடை
முகாமில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியைச் சேர்ந்த வைத்திய
கலாநிதி கி.ஸ்ரீ பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில்
ஈடுபட்டு இருந்தனர் .
குருதிக்கொடை முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வழமை
போன்று செவ் விரத்தம் பூச் செடிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.