(மன்னார் நிருபர்)
(19-03-2022)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிவாயு(கேஸ்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகின்ற மையினால் உணவகங்களின் நாட் கூலியாக வேலை செய்யும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகளவானவர்கள் வேலை செய்து வருகின்ற நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்; வீடுகளில் எரிவாயு பயன்படுத்தும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன் மண்ணெண்ணை கொள்வனவுக்காக நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை மன்னாரில் நிலவி வருகிறது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக கிராமங்களுக்குள் பயணம் செய்யும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள மையினால் நெடுந்தூர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.