(மன்னார் நிருபர்)
யாழ் இந்திய துணைத் தூதரகமும், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் மாலை வரை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முருங்கன் டொன் பொஸ்கோ ரெக் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன், வட மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்தியர் திருமதி ஜொபநாம கனேசன், டொன் பொஸ்கோ இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த இலவச சித்த மருத்துவ முகாமின் போது சுமார் 175 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.