மனிதர்களுக்காக பால், தயிர், மோர், பயிர்களுக்கு இயற்கை உரம், விவசாயத்திற்கும் உழுவதற்கும், மாட்டு வண்டிகளை இழுப்பதற்கும் என இன்னும் அனைத்து விதங்களிலும் இந்த இயற்க்கை நமக்களித்த கோமாதாக்களுக்கு விழா எடுக்கும் We Feeders மாட்டு பொங்கல் இலங்கையில் கிளிநொச்சியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நம் தேசத்தின் தற்சார்பு பொருளாதாரத்தை விவசாயத்தினூடாக தாங்கிப்பிடித்திருக்கும் வரலாறு கண்ட கிளிநொச்சி மண்ணில் தமிழர் பாரம்பரியத்துடன் விலங்குநல அமைப்பான We Feeders இந்த நிகழ்வினை நடத்தினர்.
மாணவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் We Feeders விழாவில் கலந்து கொண்டதோடு மாடுகளுக்காக பொங்கல் படைக்கப்படதோடு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் We Feeders கற்றலுக்கான உதவிகளை வழங்கியதோடு, வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அடுத்த தலைமுறையினரிடயே We Feeders அமைப்பினரால் Animal Love பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்த We Feeders விழாவானது முற்றுமுழுதாக We Feeders இளம் பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறந்த முறையில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
We Feeders அமைப்பானது ஆதரவற்ற தெருவோர வாயில்லா ஜீவன்களுக்கு தொடர்ச்சியாக உணவளிக்கும் பணிகளை செய்து வருவதுடன், விபத்தால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கான சிகிற்சை, மாணவர்களுக்கான விலங்கு நலன்சார் கருத்தரங்குகள், தெருவோரம் கைவிடப்படும் ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களை வீடுகளில் சோர்ப்பித்து உயிர்காத்தல் என உன்னதமான சேவைகளை இலங்கையில் இளைஞர்களாக முன்னெடுத்து பாரியளவில் செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இளைஞர்களால் தன்னார்வலர்களாக மேற்கொள்ளப்படும் இந்த சேவைக்கு ஆதரவளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இவர்களது சேவைகளை பார்வையிடவும் தொடர்பு கொள்ளவும், கைவிடப்படும் நாய்க்குட்டிகள் பற்றிய தகவல்களை ஏனயவர்களுக்கும் பகிர்வதன் மூலம் அவற்றுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்க வழி செய்யவும் facebook.co,/weFeeders என்ற முகப்புத்தக பக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.
நமது பண்பாட்டுடன் நமது வீட்டு விலங்குகளுக்காக உலகின் முதல் மொழியான தமிழில் மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து விவசாயத்தை கண்டுபிடித்த போது உருவான மாட்டு பொங்கல் விழாவினை இலங்கையின் வடக்கில் விவசாய பெருமைமிகு மண்ணான கிளிநொச்சியில் சிறப்பாக நடத்தி முடித்த இந்த We Feeders இளம் பெண்களை சமூகவலைதளங்களிலும் நேரிலும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.