தெருவில் கைவிடப்படும் ஆதரவற்ற விலங்குகளை காக்க வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கு We Feeders விழிப்புணர்வு கருத்தரங்கு.
அடுத்த சந்ததியினரிடம் நம் தேசத்தை கையளிக்கும் போது அதில் வீதிகளில் வாயில்லா ஜீவன்கள் பசியால் வாடுவதும், விபத்தில் சிக்குவதும், நோய்களுடன் தெருக்களில் அலைவதும், பெண் குட்டிகள் வீதிகளில் வீசி செல்லப்படுவதும், வீதியோரங்களிலேயே விலங்குகள் பிறப்பதும் பெருமளவு குறைந்திருப்பதே ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.
இதன் ஒரு அங்கமாக இலங்கையில் We Feeders பாடசாலை மாணவர்களிடையே Speak for Speechless எனும் கருத்தரங்கினை நடத்தி வருகின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில், கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை மாணவர்களிடையே Animal love சிந்தனைகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்கங்கள், அவற்றுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், விலங்குகளுக்கான கருத்தடை விளக்கங்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு புரியும் விதமாக இனிவரும் காலங்களில் தம் வீடுகளிலும் சமூகத்திலும் பின்பற்றும் வகையில் எடுத்துரைத்தார்.
வீடுகளில் வீட்டு விலங்குகளை நம் சமூகம் சரியாக கவனிக்கும் போது வீதிகளில் விலங்குகள் பசியோடு காத்திருக்காது. வீதிகளில் பெண்ணாக பிறந்த காரணத்தால் குட்டிகளை ஆறறிவு கொண்டவர்கள் வீசி செல்வதாலேயே We Feeders வீதிகளில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்றனர் வீ ஃபீடர்ஸ் இளைஞர்கள்.
அடுத்த தலைமுறையினர் அன்பான விலங்குகள் இயற்கை போன்றவற்றுடன் இணைந்து வாழ ஆர்வமாயிருப்பதையும் கல்விச்சமூகம் We Feeders பணிகளுக்கு பெரும் வரவேற்பளிப்பதையும் பல் வேறு பிரதேச பாடசாலைகளுக்கு செல்லும் போது கருத்தரங்குகளில் காண முடிகிறது.
கல்வியே வறுமையை வெல்லும் குறுக்கு வழி என்பதையும் அந்த வறுமை காரணமாக கல்வி தடைப்பட்டுவிட கூடாது என்பதிலும் கல்வியோடு அன்பு, ஜீவகாருண்யம், இயற்கை வாழ்வியல், விலங்கு நலன் போன்றவற்றையும் எதிர்கால சந்ததிக்கு ஏற்படுத்தி கொடுக்க தன்னலமின்றி சேவையாற்றும் நல்லுள்ளங்களை பாராட்ட வேண்டியது நம் சமூகத்தின் கடமை.
We Feeders ஏற்பாடு செய்து பல்வேறு பிரதேசங்களிலும் நடைபெற்று வரும் இந்த Speak for Speechless கருத்தரங்கின் போது கல்விக்கான ஊக்குவிப்பும் தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு வழங்கப்பட்டதோடு, விலங்கு நலன்சார் செயற்பாடுகளை பாராட்டி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு We Feeders அன்பளிப்புக்களை வழங்கியது. பாடசாலை ரீதியில் ஏனய துறைகளில் பாடசாலை தாண்டியும் சாதனைகளை புரிந்த மாணவர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
We Feeders மனிதாபிமான பணிகளை பார்வையிட முகப்புத்தகத்தில் facebook.com/weFeeders என்ற பக்கத்தை தொடர்பு கொள்ளமுடியும்.
இது போன்ற தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி விலங்குகளுக்காக பணியாற்றி
தொடர்ந்து உணவளித்தல், மருத்துவ சேவைகள், கருத்தடை சிகிற்சைகள், கைவிடப்படும் குட்டி களை வீடுகளுக்கு வளர்க்க தயாரானவர்களிடம் சேர்ப்பித்தல் போன்றவற்றை நீண்டகால நோக்கில் அணுகும் சமூக அக்கறை உள்ள இதுபோன்ற புத்திஜீவி இளைஞர்களுக்கு வடக்குகிழக்கு பகுதிகளில் நம் மக்கள் மிகப்பெரும் ஆதரவினை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.
மனிதர்கள், விலங்குகள், இயற்கை சமநிலை, தற்சார்பு வாழ்க்கை முறை, பாரம்பரியம் என நம் கலாசாரம் நீடித்து நிலைக்க இது போன்ற நிகழ்வுகள் அவசியமாகின்றது