மன்னார் நிருபர்
(21-03-2022)
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘பூகோள மற்றும் பிராந்திய ரீதியிலான காலநிலை மாற்றமும் அதற்கான தீர்வுகளும்’ எனும் தொனிப்பொருளில் சூழல் பாதுகாப்பு தொடர்பான விசேட கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (21)காலை 10.30 மணி அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கின் வளவாளர் ஆக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீப் ராஜா கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்கினார்
இந்த கருத்தரங்கில் சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகளவான மணல் அகழ்வு, காடழிப்புகளால் நீர் மற்றும் நில வளங்களின் பாதிப்பு தொடர்பாகவும் காற்றாலை மின்சார கோபுரங்களால் கடல் வளத்திற்கும் பறவைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் விசேட கருத்துரைகள் வழங்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் , நானாட்டான், மாந்தை மேற்கு ,முசலி , மடு போன்ற பிரதேசங்களில் சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் , மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.