அண்மையில் இலங்கைக்கு கலை இலக்கிய மற்றும் சமூகப் பணிகள் சார்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த கனடா உதயன் குழுவினருக்கு இலங்கைத் தலைநகரின் விளம்பரத்துறை விற்பன்னர்கள் ஜெகன்-விஜேய் சசோதரர்கள் குடும்பத்தினர் இராப்போசன விருந்தளித்து கௌரவித்தனர்.
FLEX ADVERTISING விளம்பர நிறுவனத்தின் பங்காளர்களான இந்த சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், சகோதர சகோதரிகள் ஆகியோர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். படத்தில் கனடா உதயன் நண்பரும் ‘ரூபம்’ வானொலி நிலைய அதிபருமான சங்கர் சிவநாதனும் காணப்படுகின்றார்.
செய்தியும் படமும்- பிரதீபன்- கொழும்பு