இந்த உலகில் எண்ணற்ற அதிசயங்கள் காணப்படுகின்றன. தேட தேட பல ஆச்சரியங்களை தரும் இந்த உலக அம்சங்கள் கடவுளின் செயலா அல்லது விஞ்ஞானத்தின் பின்ணணியா ? இந்த குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த உலகின் இத்தகைய சுவாரஸ்யங்களை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அவ்வாறானவற்றில் நாம் பெரும்பாலும் கேள்விப்படாத சிலவற்றை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1. உலகில் வானவில் பார்பதற்கு பொருத்தமான மற்றும் சிறந்த இடம் என பெயர் கொண்டது ஹவாய் (Hawai) ஆகும்.
2. உலகில் உள்ள அனைத்து மக்கள் தொகையும் Los Angeles இல் உள்ளடக்க முடியும்.
3. உயரம் குறைந்த மனிதர்கள் அதிகம் வாழும் இடம் இந்தோனேஷியா (Indonesia)
4. Newzeland இல் காணப்படும் ஒரு நகரம் 85 எழுத்துக்களை கொண்டுள்ளது .இதனை வாசிக்க எமக்கு மிகவும் பொறுமை வேண்டும்.
5. உலகில் 55% மானோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.
6. உலகிலேயே அதிக தீவுகளை கொண்ட நாடு ஸ்வீடன் ஆகும்.
7. உலகின் பல இடங்களில் உயிரியல் பூங்காவில் காணப்படும் பாண்டா கரடி சீனாவிடம் கடனாக
பெறப்பட்டதே.
8. உலகில் காணப்படும் அனைத்து எறும்புகளின் மொத்த எடை உலகிலுள்ள அனைத்து மனிதர்களினதும் மொத்த எடைக்கு சமனாகும் .
9. North Korea மற்றும் Cuba போன்ற நாடுகளில் Coca-Cola காணவும் முடியாது வாங்கவும் முடியாது.
10. பூமியின் Ozone படலம் முழுமையாக புதுப்பித்து வருவதத்திற்கு 50 வருடங்கள் எடுக்கும்.
“இவ்வாறு உலகம் அள்ளித்தரும் அதிசயங்கள் பல. அதனை தேடி அறிந்துக்கொள்ள மனிதனின் ஆர்வம் ஒன்றே போதும். “
– இரா சஹானா.