தற்போது தாயகத்தில் ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள றொன்ரோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய ஸ்தாபகரும் பிரதம குருவுமாகிய சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ‘தெய்வீக குருமணி’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற து.
இந்த பட்டமளிப்பு வைபவத்தை “தெய்வீகம்” சர்வதேச ஆன்மிக சஞ்சிகை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. றொன்ரோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய ஸ்தாபகர் சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களுக்கு இந்த “தெய்வீக குருமணி”என்னும் அதி உயர் விருது வழங்கும் வைபவம் யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள தெய்வீக அரங்கில் நடைபெற்றது.
பண்டிதரும் சைவப்புலவரும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான பொன்.சுகந்தன் அவர்களால் பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வைபவத்தில் சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களின் பாரியாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
‘தெய்வீக குருமணி’ விருது பெற்ற ஜயாவை வாழ்த்தி பெருமைகொள்வோமாக என தெய்வீகம் சர்வதேச ஆன்மிக சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் கனடா என்.ஞானச்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.