தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாத இதழான ‘இனிய நந்தவனம்’ கடந்த மாதம் தனது 25வது ஆண்டு வெள்ளி விழா மலரை சிறப்பான ஒரு இதழாக வெளியிட்டது.
இந்த இதழுக்கு எமது வேண்டுகோளை ஏற்று விளம்பரங்களைத் தந்து அத்துடன் அவைக்கான கட்டணங்களை முற்பணமாகவே தந்துதவிய கனடிய வர்த்தகப் பிரமுகர் குலா செல்லத்துரை அவர்கள் மற்றும் சமூக சேவகியும் FRONTLINE COMMUNITY CENTRE சேவை நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான விஜயா குலா அவர்களும் பாராட்டுக்களுக்குரியவர்கள்.
அவர்கள் இருவருக்கும் ‘இனிய நந்தவனம்’ இதழின் கனடிய பிரதிநிதியாகிய ‘உதயன்’ ஆர். என். லோகேந்திரலிங்கம் இன்று 24-03-2022 வியாழக்கிழமையன்று ‘இனிய நந்தவனம்’ சஞ்சிகையின் 25வது ஆண்டு வெள்ளி விழா மலரை நேரடியாக வழங்குவதைக் காணலாம்.
செய்தியும் படங்களும்: சத்தியன்