ரொறன்ரொ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்க ஒன்றாரியொ அரசு நிதி ஒதுக்கீடு
ஒன்றாரியோ மாகாணத்தில் தற்போது உள்ள வைத்திிய சேவைகளை விரிவுபடுத்தவும் அதன் மூலம் மக்களுக்கு சிறந்த மருத்தவ வசதிகளைச் செய்வதற்குமான ரொறன்ரொ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்க ஒன்றாரியொ அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த முக்கிய அறிவிப்பை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் அறிவிக்கும் வகையில் நேற்று பிற்பகல் ரொறன்ரொ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் அரச வைபவம் ஒன்று இடம்பபெற்றது.
மேற்படி வைபவத்தில் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்லூரிகள்; மற்றும் பல்கலைக் கழகங்கள் தொடர்பான அமைச்சர் ஜில் டன்லொப். ஓன்றாரியொவின் நிதி மேலான்மை சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரப்மீட் சக்காரியா மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் றேமன்ட் சோ. விஜய் தணிகாசலம், அரிஸ் பாபிகியன் ஆகியோரும் பல்கவைக் கழகம் மற்றும் ஸ்காபுறோ வைத்தியசாலை ஆகியவற்றின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப உரையாற்றிய தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் தனது தொகுதியில் இந்த புதிய மருத்துவ பீடம் அமைவதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த மருத்துவ பீடமான ஒன்றாரியொ மாகாணத்தில் உள்ள பல்லின சமூகங்கள் சார்ந்த பெற்றோர்களின் பிள்ளைகள் தங்கள் மருத்துவ உயர்கல்வியைப் பெற வாய்ப்புக்களை உருவாக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஒன்றாரியோ மாகாணத்தின் கல்லூரிகள்; மற்றும் பல்கலைக் கழகங்கள் தொடர்பான அமைச்சர் ஜில் டன்லொப் தனது உரையில் ஒன்றாரியொ மாகாணத்திில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதிகள் பற்றாக்குறை இருப்பதாகவும் கடந்த கோவிட்- 19 நோய்க்கிருமி; பரவிய காலத்தில் எமது மாகாணம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டது என்றும் எனவே ரொறன்ரொ பல்கலைக் கழகத்திின் ஸ்காபுறோ வளாகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்க எண்ணிய எமது மாகாண முதல்வர் மற்றும் மாகாணத்தின் சுகாதார அமைச்சருக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஊடகங்களின் சார்பில் வினாவப்பெற்ற கேள்விகளுக்கு அமைச்சர் தகுந்த பதிலளித்தார்
செய்தியும் படங்களும்- சத்தியன்