மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகளை வழங்க முன்வந்த மெசிடோ நிறுவனம்
(மன்னார் நிருபர்)
(29-03-2022)
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி ,அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-இதனால் மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மற்றும் கூலித்தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1200 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை முதல் கட்டமாக வழங்க மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) முன் வந்துள்ளது.
குறித்த குடும்பங்களுக்கு அவசர தேவையாக உள்ள அரிசி, மா, சீனி பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண பணிகளில் தாமதம் அடைவதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறடோ தெரிவித்தார்.
-எனினும் துரித கதியில் குறித்த உலர் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.