ஓன்றாரியோ மாகாணத்தில் மருத்துவ மற்றும் பற்சிகிச்சை காப்புறுதி இல்லாத தொழிலாளர்களுக்கு உதவு திட்டத்தை ஒன்றாரியோ அரசு அறிவித்துள்ளது ஓன்றாரியோ அரசாங்கம் நியமித்துள்ள ஒரு புதிய குழு, உடல்நலம், பல் மற்றும் பார்வை பராமரிப்புக்கான காப்புறுதி இல்லாத இலட்சக் கணக்கான முழு நேரத் தொழிலாளர்களுக்கு அதற்குரிய அரச திட்டத்தை வழங்குவதற்கு, கையடக்க நன்மைகள் அமைப்பை எவ்வாறு வடிவமைப்பது என்பதை ஆராயும் வண்ணம் குழுவை அமைத்துள்ளது
இந்த ஐந்து நபர் குழுவை முன்னாள் கனடிய மத்திதய கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரும் முதலீட்டு வங்கியாளருமான சூசன் மெக்ஆர்தர் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது, அவர் கடந்த ஆண்டு மாகாணத்தின் பொருளாதாரம் குறித்த ஆலோசனைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்களுக்கு இந்த மருத்து காப்புறுதித் திட்டம் தொடர்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தொழிலாளர் துறை அமைச்சர் மெக்னாட்டன் அளித்த பேட்டியில், இந்த அறிஞர்கள் குழு; எமது மாகாணத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி இந்த மாற்று திட்டத்தை கொண்டு வரும் என்று தெரிவித்தார்.
“நீங்கள் எங்கு வேலை செய்தாலும், ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல்நலம் மற்றும் பல் மருத்துவத் திட்டங்கள் போன்ற பலன்கள் கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அமைச்சர் மக்னாட்டன் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் . “ஒரு சிறந்ததும் நம்பகத்தன்மை கொண்டதுமான ஒன்டாரியோவை மீண்டும் உருவாக்க நாம் முயன்று வருகின்றோம். இன்று மருத்துவ காப்புறுதி அல்லது இலவச சிகிச்சை பெற வசதிகள் இல்லாத இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் அவற்றைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்” ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும்
ஆனால் புதிய குழு தனது முதல் இடைக்கால அறிக்கையை மாகாணத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு ஜூலை வரை வெளியிடாது. அதன் இறுதி அறிக்கை மற்றும் பரிந்துரைகள் அடுத்த கோடையில் எதிர்பார்க்கப்படும் என்றும் அமைச்சர் மெக்னாட்டன் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் “நாங்கள் இதை முடிந்தவரை விரைவாகச் செய்ய விரும்புகிறோம், ஆனால் இதை நாங்கள் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். திட்டத்தில் பணியாற்றும் ஆலோசகர்கள – புதிய நன்மைகள் மூலோபாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முக்கியமான ஆதரவை அணுகுவதை உறுதிசெய்ய, தற்போதுள்ள உலகளாவிய சமூகத் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்தை மேம்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுள்ளனர். இந்த செயல்முறையானது, தொழிலாளர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு நன்மை அமைப்பை உருவாக்க பரிந்துரைத்துள்ளுத.. அத்துடன் ஒன்றாரியோவில் உள்ள் அனைத்து தொழிலாளர்களின் நலன்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்