(மன்னார் நிருபர்)
(29-03-2022)
முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் மன்னார் மாவட்டத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய நீல சேனை கிராமத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் பிரதேசச் செயலகம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
-குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,உற்பட விவசாய திணைக்கள அதிகாரிகள் ,சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்றுகள்,மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்தோட்டச் செய்கையையும் அதிகாரிகள் பார்வையிட்டதோடு,குறித்த செய்கையை ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பயனாளர்களுடன் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.