குறைவான வருவாயை கொண்டுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் புத்தாண்டு பரிசாக வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. வரலாறு காணாத இந்த பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு புத்தாண்டு பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினத்தையொட்டி இந்த தொகை வழங்கப்படும் எனவும், சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொகையை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.