மன்னார் நிருபர்
(30-03-2022)
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து சதீஷ் ,ஆறுமுகம், தமிழ்ச்செல்வம்
ஆகியோர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இரவு 8.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சாம்பல் நிற கப்பலில் வந்த 5 இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர் படகில் ஏறி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர்.
இதில் தமிழ்செல்வத்திற்கு பலமான உள்காயம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலில் விரித்திருந்த 300 கிலோ வலைகளை வெட்டி விட்டு விட்டு படகில் இருந்த கையடக்க தொலைபேசி ,கயிறு , டார்ச்லைட் உள்ளிட்ட பொருட்களை
எடுத்துச் சென்றுவிட்டனர்.
மீனவர்கள் வலையினை தேடி பார்த்து விட்டு வலை கிடைக்காததால் இன்று காலை 09.30மணிக்கு நாகை மாவட்டம் கோடிக்கரை சித்தர் கோவில் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
தமிழ்ச் செல்வம் என்பவருக்கு பின்பக்கம் பலத்த உள்காயம் காரணமாக நடக்க முடியாமல் இருந்தவர் உட்பட மூவரையும் 108 ஆம்புலன்சை வரவழைத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு. அனுப்பி வைக்கப்பட்டார்.