(31-03-2022)
ஜனாதிபதியின் வீட்டிற்க்கு முன்பாக சற்று முன் மக்கள் திரண்டதால் அதனை சூழவுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.