மன்னார் நிருபர்
(31-03-2022)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 124வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையடிக்கு முன் இன்று வியாழக்கிழமை (31) காலை நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைச் செயலாளரும் மன்னார் நகர சபையின் உப தவிசாளருமான ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் முக்கிய உறுப்பினர்கள், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்பு உரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.