கனடாவின் தேசிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெற்றிக் பிரவுணுக்கு மார்க்கம் நகரில் நடத்தப்பெற்ற வரவேற்பு
கனடாவின் தேசிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெற்றிக் பிரவுண் அவர்களுக்கு மார்க்கம் நகரில் நடத்தப்பெற்ற வரவேற்பு நிகழ்வு சிறப்பாகவும் ஆதரவாளர்களின் வாழ்த்துக்களோடும் வெற்றிகரமாக நடைபெற்றது. செல்வி அபீனா நிமல்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விரைவில் நடைபெறவுள்ள கனடாவின் தேசியக் கட்சிகளில் ஒன்றான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராகவும் கனடாவின் அடுத்த பிரதமராகவும் தெர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பைப் பெற்றுள்ள பிரம்ரன் மாநகர சபையின் நகரபிதா பெற்றிக் பிரவுண் அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தமது ஆதரவைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாது. நண்பர்கள் வட்டத்தில் நிதி சேகரிப்பையும் செய்த நிமால் விநாயகமூர்த்தி அவர்களின் நல்லெண்ணத்தை பெற்றிக் பிரவுண் அவர்கள் பாராட்டினார்கள்.
மேற்படி வரவேற்பு நிகழ்விற்கும் நிதி சேகரிப்பு நிகழ்விற்கும் கனடாவில் இயங்கிவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிக பட்ச உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்போது கனடா உதயன் பத்திரிகையில் பிரசுரமாகிய தனது பிரச்சாரம் தொடர்பான செய்தியைப் பார்த்து மிகுந்த பரவசமடைந்தார்.
சத்தியன்- கனடா உதயன்