கனடாவின் தேசிய என்டிபி கட்சியின் தலைவர் ஜெக்மிட் சிங் அண்மையில் SCARBOROUGH MAJESTIC SHOPPING MALL க்கு விஜயம்
கனடாவின் மத்திய மற்றும் தேசிய என்டிபி கட்சியின் தலைவர் திரு ஜெக்மிட் சிங் அண்மையில் கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள மாபெரும் தமிழர் அங்காடியான (TAMIL’S SHOPPING MALL ) MAJESTIC SHOPPING MALL க்கு விஜயம் செய்தார்.
அப்போது ஜெக்மிட் சிங் அவர்களுடன் பொது முகாமையாளர் (GENERAL MANAGER)திரு கிறிஸ் சிவக்கொழுந்து மற்றும் ஒன்றாரியோ மாகாண என்டிபி வேட்பாளர் நீதன் சாண் ஆகியோர் உடனிருந்தனர்.
பல வர்த்தக நிறுவனங்களுக்கும் விஜயம் செய்த இந்த குழு அனைத்து தமிழர் வர்த்தக நிலையங்களுக்கும் விஜயம் செய்து உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டது.
இங்கு காணப்படும் படத்தில் MAJESTIC தமிழர் அங்காடியின் மேல் மாடியில் அமைந்துள்ள ‘யுகம் வானொலி’ கலையகத்திற்கும் இந்த குழு விஜயம் செய்து வானொலி நிலையத்தின் இணை அதிபர்கள் கணபதி ரவீந்திரன் – ரூபி யோகதாசன் ஆகியோருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
படங்கள்; ரவி