தெற்காசியாவின் சாபக்கேடு குடும்ப ஆட்சி. இதில் எந்த நாடும் கட்சியும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தற்போது நடைபெறும் ஆட்சியும், அத்துடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ராஜபக்ச சகோதரர்கள் நால்வரும் ஆட்சியின் உயர் பொறுப்புகளில் உள்ளனர். `இளவரசர்` நாமல் அமைச்சர், மற்றும் சில ராஜபக்சக்கள் வேறு சில அமைச்சு மற்றும் இதர பொறுப்புகளில்.
தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். பெரியவர் தொண்டமான், பின்னர் ஆறுமுகன் தொண்டமான், பிறகு அவரது என்று வரிசை செல்லுகிறது.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும், பொதுச் செயலராகவும், நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு ஆகியவை தொண்டமான் குடும்பத்தினர் வசம் சென்றுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தேசிய சபை ? கூட்டத்தில் நடந்தது என்ன?
மலையகத் தமிழர்களுக்கான மாபெரும் அரசியல் மற்றும் தொழிற்சங்க இயக்கமாக கருதப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவி மீண்டுமொருமுறை தொண்டமான் குடும்பம் வசம் சென்றுள்ளது. காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமானை, எதிர்ப்பின்றி – ஏகமனதாக தேசியசபை புதன்கிழமை (30) ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவி ஜீவன் தொண்டமான் வசம் உள்ள நிலையில், கட்சியின் நிர்வாகப் பொறுப்பு ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜி தொண்டமான் கைகளுக்குள் உள்ளது. தற்போது தலைமைப்பதவி செந்தில் தொண்டமானின் கைகளுக்குள் வந்துள்ளது. அந்தவகையில் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தின் முழுமையான சாவிகொத்து தொண்டமான் குடும்ப வசம் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இ தொ கா தலைவராக செயற்பட்ட அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர், அப்பதவி வெற்றிடமாகவே காணப்பட்டது. எனவே, புதிய தலைவர் உட்பட இதர பதவிகளுக்காக உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கொட்டகலையில் கூடியது.
தலைவர் பதவிக்கு செந்தில் தொண்டமானை நியமிக்க வேண்டும் என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுவிட்டதால், அப்பதவிக்கு போட்டி நிலவவில்லை. அவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
தலைமைப்பதவிக்கு சவால் விடுப்பாரென பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு நிதிச்செயலாளர் பதவிக்கு மேலதிகமாக கட்சியின் தவிசாளர் பொறுப்பும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கும் தேசிய சபையில் ஆட்சேபனை எதுவும் முன்வைக்கப்படவில்லை. பிரதி தவிசாளர் பதவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ராஜதுரையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதித் தலைவர்களாக மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜும், அனுசியா சிவராஜாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸின் சார்பில் ஆசிரியர் சார் தொழிற்சங்க விவகாரத்தை கணபதி கனகராஜ் கையாண்டுவருகின்றார். பொதுச்செயலாளர் உட்பட முக்கிய பதவிகளை அனுசியாவும் வகித்துள்ளார்.
மத்திய மாகாணசபையின் அவைத் தலைவராக செயற்பட்ட அதேபோல காங்கிரஸின் நீண்டகால உறுப்பினரான துரை மதியுகராஜா திட்டமிட்ட அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். பிரதித் தலைவருக்கான போட்டியில் அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் தோல்வி ஏற்படும் என தெரிந்ததால் கடந்த பொதுத்தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பை மதியுகராஜா மறுத்தார். அவரின் எதிர்ப்பையும்மீறி பாரத் அருள்சாமி களமிறக்கப்பட்டார். அவரால் வெற்றிபெறமுடியாமல்போனது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே துரை மதியுகராஜா (கண்டி துரை) ஓரங்கப்பட்டுள்ளார்.பிரஜாசக்தி திட்ட பணிப்பாளராக செயற்படும் பாரத் அருள்சாமிக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனுக்கும், சிவராஜாவுக்கும் போஷகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி .சக்திவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் பிரிவுக்கான உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்தும், தொழிற்சங்க பிரிவுக்கான தேசிய அமைப்பாளராக பழனி சசிகுமாரும் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
உப தலைவர்களின் எண்ணிக்கை இம்முறை குறைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்புமூலமும், பரிந்துரைமூலமும் சுமார் 12 உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்குமார், சென்பகவள்ளி, யோகராஜ், சச்சிதானந்தன் ஆகியோருக்கும், பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அசோக்குமார், சிவலிங்கம் ஆகியோருக்கும் உப தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் உப தலைவர் பதவி சிவஞானத்திடமும், இரத்தினபுரி மாவட்ட உப தலைவர் பொறுப்பு ராஜமணியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த எம்.மேரி, கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்லசாமி திருகேதீஸ் ஆகியோரும் உப தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இரத்தினபுரி மாவட்ட அரசியல் அமைப்பாளராக ரூபன் பெருமாளும், நுவரெலியா மாவட்ட அரசியல் அமைப்பாளராக பாரதிசாதனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் கட்டுப்பாட்டுக்குள் காங்கிரஸ் வந்த பிறகு, இரு தசாப்தங்கள்வரை அவர் தலைமைப்பதவியில் நீடித்தார். அதன்பிறகு ஆறுமுகன் தொண்டமான் தெரிவானார், இடையில் முத்துசிவலிங்கத்துக்கு தற்காலிகமாக தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டது. தற்போது அப்பதவியை செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றுள்ளார்.
” சந்தா பெறாத கட்சியாக காங்கிரஸை மாற்ற வேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியம். அந்த இலக்கை அடையவே நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.” – என்று தலைமைப்பதவியை ஏற்ற பிறகும் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார் செந்தில் தொண்டமான்.
அதேபோல இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பதவி பங்கீடு இடம்பெற்றுள்ளது எனவும், காங்கிரஸின் இனி தனிநபர் முடிவுக்கு இடமில்லை எனவும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்தார். ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் தனிநபர் முடிவே ஆதிக்கம் செலுத்தியது என்ற விடயத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
‘சந்தா வாங்காத சங்கம்’ என்ற இலக்கு சாத்தியமா? ‘கண்டி துரை’க்கு ‘வெட்டு’ – பாரத்துக்கு பதவி!!
இ.தொ.காவின் சாவிக்கொத்து தொண்டமான் குடும்பம் வசம்!