(02-04-2022)
கொழும்பில் ஜனாதிபதி கோட்டாக்கு எதிராக நேற்றிரவு (01) மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளனர்.
நுகேகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.