(02-04-2022)
அதிகரித்து வரும் போராட்டங்களின் தொடராக நாட்டில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரவ வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தின் மூலம் பிடியாணையின்றி கைதானோரை காவலில் வைக்கவும் – சொத்துக்களை முடக்கவும் – எந்தவோர் – இடத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும் – கூட்டங்களை இடை நிறுத்துவதற்கும் நீதிமன்றால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளை பிறப்பிக்கவும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
நேற்று முன்தினம் தொடக்கம் மேல் மாகாணத்தில் பரவலாக போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றுவருகின்றன.
இதன் அடிப்படையில் மேல் மாகாணம் முழுமைக்கும் நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரையில் நடைமுறையில் இருக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது