(02-04-2022)
மன்னார் மறைமாவட்ட முன்னை நாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஆண்டகையின் நினைவு பேருரை மன்னாரில் இன்று (2) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று சனிக்கிழமை (2) மாலை 3 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு திருமலை ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார், மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதோடு,அருட்தந்தையர்கள்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவு பேருரை நூலை ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை வழங்கி வைத்தார்.
-அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் இடம் பெற்றது.
நினைவுப் பேருரையினை மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது