(04-04-2022)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்வாதார பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராகவும் வாழ்வாதார பொருட்களின் விலை குறைக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இரத்தினபுரி ,இரக்குவானை,பலாங்கொடை பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.இதனால் குறிப்பிட்ட பிரதேசங்களில் பல மணி நேரம் வாகன நெரிசல் காணப்பட்டது.