(05-04-2022)
வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (05) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக கடைவீதியை அடைந்து கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து பழைய பேரூந்து நிலையத்தின சென்றடைந்திருந்தது.

இதன்போது ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் போக்குவரத்து பொலிஸார் மாற்றுவழியினூடாக வாகனங்களை செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இந்நிலையில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக மாணவர்கள் நீண்ட நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டமையினாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.
























