இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகாலச் சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது.
குறித்த அவசர கால சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு,அவசர கால சட்டத்தை மீளப்பெற வழியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் 05.04.22 நள்ளிரவு முதல் மீள பெறப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரசுரித்துள்ளார்.