*திருக்குறள் வரலாற்று உலகச் சாதனை நிகழ்ச்சி*
பேராசிரியர் பானு ரேகா
கனடாவில் பொன்நிறத் தகடுகளில் 1330 திருக்குறள் பதிப்பித்துக் காட்சிப்படுத்தி திருக்குறள் உலக சாதனை
உலகச் சாதனையாளர், எழுத்தாளர் , கவிஞர், பாடலாசிரியர், திருக்குறள் நூலறி மாமணி அகணி சுரேஸ் அவர்களின் மேலும் ஒரு திருக்குறள் சாதனை.
கனடா நேரம் ஏப்ரல் 4ஆம் திகதி அதிகாலை 12:30 மணிக்கு ஆரம்பித்துக் காலை 7 மணி வரை ஆறரை மணித்தியாலங்களில் 1330 திருக்குறள் குறட்பாக்களை 45 பொன்தகடுகளில் வெப்ப அழுத்திகளைப் பயன்படுத்திப் பதங்கமாதல் தொழில்நுட்பம் மூலம் பொன்நிறத்தகட்டில் உலக சாதனையாளர் அகணி சுரேஸ் பதித்துள்ளார். இவ்வாறு பொன்நிறத்தகட்டில் மிகவும் தெளிவாகப் பதித்த திருக்குறள் வருங்காலத்தில் கனடாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாகக் காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு பொன்நிறத் திருக்குறள் தட்டுகளை மீண்டும் மீண்டும் அரங்குகளில் அழகாகக் காட்சிப்படுத்தப்படுவதன் மூலம் திருக்குறள் இனை மென்மேலும் பெருமையடையச் செய்யலாம் என்ற நோக்கத்தில் இந்தச் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சாதனையாளர் அகணி சுரேஸ் தெரிவித்தார்.
இந்தத் திருக்குறள் சாதனை நிகழ்வு
மல்டி சுமார்ட் சொலுசன், கனடா
மற்றும் தமிழ் மகள் இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்தன. இந்தச் சாதனை நிகழ்வில் உலகச் சாதனையாளர், பேராசிரியர், திருக்குறள் மாமணி பேராசிரியர் பானு ரேகா, தமிழ்நாடு ,கவிஞர், திருக்குறள் நூலறி மாமணி, குமரகுரு கணபதிப்பிள்ளை , கனடா ஆகியோர் கண்காணிப்பாளர்களாகத் தொண்டாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் திருக்குறள் நூலறி மாமணி மருத்துவர் செல்வி செந்தமிழ் முருகேசன், அமெரிக்கா அவர்கள் மறை மகிழ் மன்றம், வட அமெரிக்கா சார்பில் வாழ்த்துரை, தொடக்கவுரை நிகழ்த்திச் சிறப்பித்தார்.
உலகச் சாதனையாளர், பேராசிரியர், திருக்குறள் மாமணி பேராசிரியர் பானு ரேகா தமிழ்நாடு
கவிஞர், திருக்குறள் நூலறி மாமணி, குமரகுரு கணபதிப்பிள்ளை, பொருளாளர், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆகியோர் தொடக்கவுரையும், நிறைவுரையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
சாதனை நிகழ்வில் தொழில் நுட்பப் படிமுறைகளை விபரித்ததோடு, கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களுக்கான 30குறட்பாக்களை பொன்நிறத்தகட்டில் பதிக்கும் படிமுறைகளை மெய்நிகர்வழியாகக் காட்சிப்படுத்தி விளக்கினார்.
பொன்தகட்டில் திருக்குறள் பதித்த அகணி சுரேஸ் அவர்களின் உலகச் சாதனையைப் பாராட்டி வாழ்த்துப் பா ஒன்றினையும்உலகச் சாதனையாளர், பேராசிரியர் திருக்குறள் மாமணி பானு ரேகா அவர்கள் வழங்கினார்.
பா வகை:
*கட்டளைக் கலித்துறை*
*திருக்குறள் வரலாற்று உலகச் சாதனை நிகழ்ச்சி*
பொன்தகட்டில் அச்சுப் பதித்தக் குறள்கள் பேரருளே
பொன்மனச் செம்மல் பெருமை மிகுப்பா பெருவரமே
பொன்னம் பலவானின் பொற்பாதச் சீரில் பெறுமிடமே
பொன்மகள் அன்னைக்குப் பொன்மலர்ப் பாவணி பொற்படைப்பே!
கவிஞர், திருக்குறள் செம்மல் கந்த ஸ்ரீ பஞ்சநாதன், தலைவர் ,கனடாத் தமிழ்க்கவிஞர் கழகம் அவர்கள் சாதனை நிறைவில் கலந்து அகணி சுரேஸ் அவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். பெறுமதி வாய்ந்த இந்த பொன்நிற திருக்குறள் தட்டுகள் பல நிகழ்ச்சிகளில் காட்சிப் பொருளாகி திருக்குறளினை மென்மேலும் பெருமைப்படுத்தும் என்று உலகச் சாதனையாளர் நம்பிக்கை தெரிவித்தார்தெரிவித்தார்
கனடாவில் நடைப்பெற்ற இச்செயல் சாதனையாக அங்கிகரிக்கப்பட்டது..
ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
இந்தியா நிறுவனர் வெங்கடேசன்.