பாராளுமன்ற உறுப்பினரின் அதிர்ச்சித் தகவல்
தற்போதைய கொந்தளிப்பான அரசியல் சூழ் நிலையில் கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஓருவுரின் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
இந்த தகவலைத் தொடர்ந்து திரிபோலி இராணுவ முகாமில் இயங்கியவர்கள் இப்படியான மோட்டார் சைக்கிளில் சென்றே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தனர் என்ற உண்மையான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்
அவர் தொடர்ந்;து தகவல் தருகையில் ‘ அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் குழு நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதாகவும் இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் உயிரை ஆபத்துக்குள் தள்ளி இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
திரிபோலி இராணுவ முகாமில் இயங்கியவர்கள் இப்படியான மோட்டார் சைக்கிளில் சென்றே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தனர்.
மிரிஹான சம்பவத்தின் போது இப்படியான அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் குழு சென்றிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் இப்படியான அடையாளம் தெரியாத நபர்கள் வந்து துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு போகலாம்.
அல்லது அப்பாவி பொது மகன் ஒருவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம்.
இவர்கள் முகங்களை மூடிக்கொண்டு வந்திருந்தனர். காவல்துறை அதிகாரியான வெத்தசிங்க என்பவர் இவர்களை நிறுத்தினார். மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக்கொண்டார். முகமூடியை கழற்ற முயன்றார். அதனை செய்ய விடவில்லை.
தற்போது அந்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த முயற்சித்து வருகின்றனர். இராணுவ தளபதி, காவல்துறைமா அதிபரை தொடர்புகொண்டு இது குறித்து விசாரிக்குமாறு கூறியுள்ளார்.
இராணுவ தளபதி எப்படி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிட முடியும்? சாகி கால்லகே என்ற நபரின் முகநூல் கணக்கில், காவல்துறையினர், இராணுவத்தினரிடம் அடி வாங்க உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
ஊடகங்களை தாக்கினர், நேரடி ஒளிப்பரப்புகளை தடை செய்தனர். ஊடகவியலாளர்களை தாக்கினர்.
இது மிகவும் பாரதூரமான நிலைமை. அடையாளம் தெரியாத குழுக்கள் என்பது அரச பயங்கரவாதம் வரை நீடித்து செல்லலாம்.
அரசாங்கம் என்ற வகையில் இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். நிலைமை இப்படி சென்றால், 88-89 ஆம் ஆண்டு காலத்தில் ஆயுதங்களை கொண்டு சாதாரண மக்களை பழிவாங்கினர்.
மக்களை கொன்றனர். எனது தந்தையையும் கொலை செய்தனர்.
அந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் அரசியல் திரும்பலாம்.
இதனால், உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு இருக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
துப்பாக்கிகளுடன் அடையாளம் தெரியாத குழுக்கள் நடமாட இடமளிக்க வேண்டாம் எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.