(மன்னார் நிருபர்)
(06-04-2022)
-மனித உரிமைகள் தொடர்பான விசேட கருத்தரங்கு மன்னாரில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் கலந்து கொண்டு அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.
இதன் போது மனித உரிமைகள் குறித்தும்,காணி பிணக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 30 பேர் தெரிவு செய்யப்பட்டு குறித்த கருத்தரங்கு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஜான்சன் , மன்னார் நகரசபை உறுப்பினர்கள் , மன்னார் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் , மன்னார் சிவில் சமூக அமைப்பினர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.