(மன்னார் நிருபர்)
(11-04-2022)
மன்னார் பெரிய கடை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய கடை சனசமூக நிலைய அங்கத்துவ குடும்பங்களுக்கான நல நோக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (11) காலை 10.30 மணியளவில் மன்னார் பெரிய கடை சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.
பெரிய கடை சன சமூக நிலையத்தின் தலைவர் நாகராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக பெரிய கடை கிராம அலுவலகர் ஏ.எஸ்.டல்மேரா,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றேக்கா,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.நகுசீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த கிராமத்தில் இருந்து தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த 2 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட தோடு, குறித்த மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வங்கியில் வைப்பில் இடப்பட்டு, வங்கிப் புத்தகம் கையளிக்கப்பட்டது.
-மேலும் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 19 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளும்,13 மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.