(11-04-2022)
யாழ். தெல்லிப்பளையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் எங்கே? வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்து. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு. வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
-குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.