இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையிலான கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால், இலங்கையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்டு அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச நாட்டு மக்களுக்கு இன்று (திங்கள்கிழமை) உரையாற்றினார். மகிந்த ராஜபட்ச பேசியதாவது:
“பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 24 மணி நேரமும் அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். சாலையில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், இங்கு வரக்கூடிய டாலரை நாடு இழக்கிறது” என்றார் அவர்.