எதிர்வரும் ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளராக -Markham-Thornhill. தொகுதியில் போட்டியிடும் லோகன் கணபதி அவர்களை ஆதரித்து உற்சாகமளிக்கும் வகையில் நேற்று மாலை ரொரன்ரோ மாநகரில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் ஒன்றாரியோவின் அமைச்சர்களான
Ontario’s Minister of Higher Education and Colleges Mrs Jill Dunlop and Minster of Education Stephen Lecce மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல்லினங்;களைச் சார்ந்த ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அவர்களோடு தமிழ் பேசும் வர்த்தகப் பிரமுகர்களாக சங்கர் நல்லதம்பி. ரஜீவ் செபராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
லோகன் கணபதி அவர்களின் அலுவலக உதவியாளர் சிவா அவர்கள் நிகழ்விற்கு அவசியமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தார். லோகன் கணபதி அவர்களின் குடும்பத்தினரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
செய்தியும் படங்களும் சத்தியன்- கனடா உதயன்