தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள தமிழகத்தின் இலக்கியவாதிகளில் ஒருவரான திருமதி அண்ணாமலை தமிழரசியை நேற்று நடைபெற்ற ஒரு அரச வைபவத்தில் வரவேற்று வாழ்த்திய மூன்று கனடிய அரசியல் தலைவர்கள் அவரி;டம் சிறிது நேரம் உரையாடியும் மகிழ்ந்தனர்.
நேற்று விட்பி ( Whitby)நகருக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த கனடாவின் Minister Responsible for the Federal Economic Development Agency for Southern Ontario Minister Helena Jaczek மற்றும் விட்பி ( Whitby)நகரத்தின் பாராளுமன்ற உறுப்பினர் MP Turnbull மற்றும் விட்பி( Whitby) நகரபிதா Mayor Mitchell ஆகியோர் கலந்து கொண்டு, விட்பி நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர்.
அவ்வேளை அங்கு சமூகமளித்திருந்த தமிழகத்தின் இலக்கியவாதிகளில் ஒருவரான திருமதி அண்ணாமலை தமிழரசியை மேற்படி மூன்று அரசியல் தலைவர்களும் வரவேற்று தமது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டு தமிழரசியின் கனடிய வருகை பற்றியும் கலந்துரையாடினர்.
இந்ந சந்திப்பை கனடா உதயன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.