தவறவிட்டவர் மீண்டும் திரையிடும் வண்ணம் வேண்டுகின்றனர்
கடந்த 9ம் திகதியன்று சனிக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘நெற்வின்’ கலையரங்கில் 3 காட்சிகளாக திரையிடப்பெற்ற யாழ் மண்ணின் திரைப்படம் ‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் பாராட்டிமகிழ்ந்த வண்ணம் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் திரைப்பபடத்தின் சிறப்புக்கள் பற்றி தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில் மேற்படி திரைப்படத்தை பார்க்கத் தவறியவர்கள் ‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படத்தை மொன்றியால் நகரிலும் மிசிசாகா பிரம்ரன் நகரங்களிலும் திரையிடும் படி சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொர்பாக திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் அவர்கள் அங்கிருந்து கனடாவிற்கு தொடர்பு கொண்டு. திரைப்படத்தை கனடாவில் திரையிட முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்ட குழுவினரையும் பாராட்டியுள்ளார்.