சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜர்..!
(15-04-2022)
ஜனாதிபதிக்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அதற்கு ஆதரவாக பொலிஸ் உத்தியோகத்தர் கருத்து தெரிவித்தார்.
பின்னர் அவரை விசாரணைக்காக பொலிஸ் திணைக்களம் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்ததுடன் அவரை கைதுசெய்தது
இன்று பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை அவருக்காக 12 சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி ஆஜராகினர்.
மக்கள் நலனிற்காக இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜராகிவருகின்றனர்.
பொலிஸ் உத்தியோகத்தருக்காக ஆஜராகிய நாங்கள் ஒருவர் தனது கருத்தை தெரிவிப்பது குற்றமில்லை-அது ஒருவரின் அடிப்படை உரிமை என நீதிமன்றத்தில் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அரசாங்கமே இந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது-நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கவலையை வெளியிடுவது குற்றமில்லை என தெரிவித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றம் பிணைவழங்க முன்வந்தது என அவர் குறிப்பிட்டார்.