மன்னார் நிருபர்
(18-04-2022)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு என லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தின் நிதி உதவியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் திங்கட்கிழமை (18) வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சையின் தரத்தை அதிகரிக்கும் வகையிலும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குவதற்கான தேவையின் அடிப்படையில் வைத்தியசாலையின் அவசியத் தேவை கருதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மன்னார் லயன்ஸ் கழகத்தின் அழைப்பின் பெயரில் லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தினால் மேற்படி மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் தலைவர் , லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜ் வினோதன், மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளடங்களாக சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைத்திய தேவைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.