31 நாள் உண்ணாநோன்பிருந்து மண்ணுக்காக உயிர்துறந்த மக்களைப் பெற்ற மகராசி
-நக்கீரன்
கோலாலம்பூர், ஏப்.20
ஓன்றல்ல; இரண்டல்ல; பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்த மகராசி ஒருவர், 31 நாட்கள் தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு, கடைசியில் தன் இன்னுயிரை பிறந்த மண்ணுக்காக ஈகம் செய்தார்.
அவர்தான் அன்னை பூபதி.
தான் இழுத்த இழுப்பிற்கு இசைவு தெரிவிக்க மறுத்த பிரபாகரனையும் அவர் தலைமையேற்று வழிநடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நசுக்குவதற்காக அமைதிப் படை என்ற பெயரில் ரஜீவ் காந்தி இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பினார்.
அந்த இராணுவம், வியட்நாமில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்டதைப் போல தமிழ்ப் பெண்களின் மானத்தையும் கற்பையும் சூறையாடியதால், இலங்கை மண்ணில் இருந்து, குறிப்பாக தமிழ் ஈழத்திலிருந்து இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி 1988 மார்ச் 19-ஆம் நாள் அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி சார்பில் நோன்பு தொடங்கிய பூபதியம்மாள், 31 நாட்கள் வரை வைராக்கியத்துடன் இருந்து ஏப்ரல் 19-இல், 56 வயதில் உயிர் துறந்தார்.
ஈழத் தமிழர் வரலாற்றில் ஏப்ரல் 19-ஆம் நாள், மறக்க முடியாத நாள்; அதனால்தான் இன்றைய தினத்தை ‘தமிழீழப் பற்றாளர் நாள்’ என ஆண்டுதோறும் தமிழீழ தாயகத்தில் அனுசரிக்கப்படுகிறது.