(மன்னார் நிருபர்)
(21-04-2022)
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மாலை 6 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
-தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களை நினைவுகூரும் வகையில் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-இதன் போது மத தலைவர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.