கொரொனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த இறுதிப் போட்டி நிகழ்ச்சி.. மண்டபம் நிறைந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் கூடி மகிழ்ந்தனர்.
இவ்வாண்டு இடம்பெற்ற கண்கவர் நிகழ்வு எனப் புகழ்ந்த ரசிகர்கள் அமைப்பாளர் அர்யுன் அவர்களைப் பாராட்டினர்
கடந்த சனிக்கிழமை 16ம் திகதி கனடாவில் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘ மார்க்கம் தியேட்டர்’ என்னும் அற்புதமானதும் நவீன வசதிகள் கொண்டதுமான மண்டபத்தில் நடைபெற்ற ‘குடடீஸ் ஆடலாமா- சீசன் – 4 நடனப்போட்டியில் சாய்கவின் ஶ்ரீதரன் முதற்பரிசைத் தட்டிக் கொண்டார்…இவருக்கு உலகெங்கும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
வெற்றியாளன் சாய்கவின் ஶ்ரீதரன் அவர்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் மற்றும் 2000 டாலர்களுக்கான காசோலை ஆகியன வெறறி மேடையில் வைத்து வழங்கப்பெற்றன.
கடந்தத இரண்டு வருடங்களாக கொரொனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த இறுதிப் போட்டி நிகழ்ச்சிக்கு மண்டபம் நிறைந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் கூடி மகிழ்ந்தனர்.
அவர்களில் வர்த்தகப் பெருமக்ககள் கலை ரசிகர்கள் என பலர் கூடி வந்து மண்டபத்தை நிறைத்திருந்தனர்.
‘குடடீஸ் ஆடலாமா- சீசன் – 4 நடனப்போட்டி என்னும் இந்த அற்புதமான நிகழ்வு இவ்வாண்டு இடம்பெற்ற கண்கவர் மேடை எனப் புகழ்ந்த ரசிகர்கள் அமைப்பாளர் அர்யுன் அவர்களையும் பாராட்டினர்.
மேற்படி நடனப் போட்டியில் இரண்டாவது பரிசை செல்வி நவீனாவும் மூன்றாவது பரிசை செல்வி சயானியும் தட்டிக்கொண்டனர் எ ன்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க மொன்றியால் ஒடடாவா மற்றும் வோட்டலூ ஆகிய நகரங்களிலிருந்தும் இளையவர்களும் அவர் தம் பெற்றோர்களும் வந்திருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.இங்கு காணப்படும் படங்கள் ‘குடடீஸ் ஆடலாமா- சீசன் – 4 நடனப்போட்டியில் எடுக்கப்பெற்றவையாகும்
படங்களும் செய்தியும் சத்தியன்