ரஷ்யா செல்வதால் ஏற்படும் எமக்கு எந்த ஆதாயமும் இல்லை. எனவே நாம் எதற்கு அந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும். அந்த பைத்தியக்காரர்களின் தடை எம்மை ஒன்றும் செய்யாது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். நேற்று ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்ட கனடாவின் அரசியல் பிரமுகர்கள் பலர். இவர்களில் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களும் ஒருவர் என அறியப்படுகின்றது.
கனடாவில் தற்போது பல்வேறு பதவிகளில் உள்ள முதல்வர்கள், நகர மேயர்கள், உளவுத்துறை மூத்த அதிகாரிகள் உட்பட பல எண்ணிக்கையிலான பிரமுகர்களுக்கு ரஷ்யா தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 61 கனேடியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம், பட்டியலில் குறிப்பிட்டுள்ளவர்கள் ரஷ்யாவுக்கு செல்ல தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் வளர்ச்சிக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு எதிரான வெறுப்பை செயல்படுத்துவதில் கனடா நிர்வாகம் முனைப்பு காட்டிவருவதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில் மேற்படி தடை உத்தரவு காரணமாக தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒட்டாவா மேயர் Jim Watson தெரிவிக்கையில், எப்போதும் ரஷ்யாவுக்கு செல்ல தாம் திட்டமிட்டதில்லை எனவும், அவ்வாறான ஒரு முடிவுக்கு தாம் எப்போதும் வரப்போவதில்லை எனவும், ரஷ்யா செல்வதால் ஏற்படும் எந்த ஆதாயமும் தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அல்பர்ட்டா முதல்வர் Jason Kenney, கனடா மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem, Saskatchewan முதல்வர் Scott Moe, ஐக்கிய நாடுகள் சபைக்கான கனேடிய தூதரான பாப் ரே, நிதித்துறை துணை அமைச்சர் மைக்கேல் சபியா,
மேலும். மனிடோபா மாகாண முதல்வர் ஹீதர், ரொறன்ரோ நகர மேயர் ரோறி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உட்பட மொத்தம் 61 முக்கிய கனடிய அரசியல் தலைவர்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.