சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் அருண் விஜய் அவரின் மகன் ஆர்னவ் விஜய் மற்றும் அருண் விஜயின் தந்தை விஜயகுமார் என மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் திரைப்படம் ஓ மைடொக்.
இந்தப் படம் செல்லப்பிராணியான நாய்க்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை பற்றிய படமாக இருக்கலாம் என எதிர் பாக்கப்படும் நிலையில், இந்த திரைப்படத்தில் இடம் பெறவிருக்கும் It’s my kinda day என்ற பாடல் அண்மையில் யூடியூப்பில் வெளியாகி இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது.
சூப்பர் சுப்பு வரிகளை எழுத, நிவாஸ் கேபிரசன்னா இசையமைத்திருக்கும் இப்பாடலை கனடா வாழ் ‘குட்டிப் பாடகன்’ அஜீஸ் சிவகுமார் பாடியுள்ளார்.
பின்னணிப் பாடகனாக உருவெடுத்திருப்பது மகிழ்வைத் தருவதாக குறிப்பிடும் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுவனான அஜீஸ் தனது பெற்றோரின் ஒத்துழைப்புடனும் ஊக்குவிப்புடனும் இன்னும் பல பாடல்களை பாடவிரும்புவதாகவும் தெரிவித்துளளார்.